Sri Lanka 24 Hours Online Breaking News

அக்கரப்பத்தனை எல்பியன் ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கை

0

அக்கரப்பத்தனை எல்பியன் ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் வெள்ளநீர் விவசாய பிரதேசங்களுக்குள் உட்புகுவதாகவும் ஆற்றுக்கு அண்மித்த வீடுகள் மற்றும் மக்கள் உடைமைகள் பாதிக்கப்படுவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் தனது அமைச்சின் பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆற்றை அகலமாக்கும் நடவடிக்கை தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை டயகம மேற்கு பிரதேச மக்களின்; போக்குவரத்து வசதி கருதி அப் பிரதேச பாதை செப்பனிடப்பட்டுள்ளது. சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி உதவியின் கீழ் இந்த பாதை சீர் செய்யப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like