அத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து

இதயும் பாருங்க

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

அத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1ஆம் திகதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1ஆம் திகதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

நேற்று அத்திவரதர் ரோஸ் நிற பட்டாடையில் தாமரை மலர்கள், எலுமிச்சம் மாலை மற்றும் வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வருகிற 16ஆம் திகதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது

வருகிற 17 ஆம் திகதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படும். முக்கிய நபர்களுக்கான தரிசன வாயிலும் 12 மணிக்கு அடைக்கப்படும்.

உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) முக்கிய நபர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படும்.

பொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 17ஆம் திகதி அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

இதுவரை அத்திவரதரை 85 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அத்திவரதரை குளத்தில் வைக்க அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 17ஆம் திகதி மாலை ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.

இது புதுசு

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...

More Articles Like This