ஊடக அறம், உண்மையின் நிறம்!

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன தினம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மலையகத்தின் மூத்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி எஸ்.தொண்டமானின் 106ஆவது ஜனன தினம் இன்றாகும்.

இதையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்டம் எம்.பியுமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையில், கொழும்பு காலிமுகத்திடலிலுள்ள பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி எஸ்.தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் விசேடப் பூஜைகள் இடம்பெற்றன.

இதன்போது, உலக ஆணழகன் போட்டியில் இலங்கைக்கு வெங்கலப் பதக்கத்தை பெற்றுகொடுத்த எம்.ராஜ்குமாருக்கு, 3 இலட்சம் ரூபாய் பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.