அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால்.

வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினான்.

இந்த திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர் என அம்மாநில கவர்னர் கிரெக் அபார்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.