தலத்தா அத்துகோரல

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளையொன்றையோ அல்லது அதனுடன் இணைந்த வேறு எந்தவொரு நிறுவனங்களையும் இலங்கையில் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ, கடந்த 5ஆம் திகதி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷசை சந்தித்து தம்மை குறித்து வெளியிட்ட கருத்துகளை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளையொன்றையோ அல்லது அதனுடன் இணைந்த வேறு எந்தவொரு நிறுவனங்களையும் இலங்கையில் அமைப்பதற்கு நீதியமைச்சர் தலாதா அத்துக்கோரள எதிர்ப்பு வெளியிடவில்லை என, மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது, ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ, கடந்த 5ஆம் திகதி கருத்து வெளியிட்டிருந்தாகவும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.