ஊடக அறம், உண்மையின் நிறம்!

அமைதிக்கான நொபெல் பரிசை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும்; குமுறும் டிரம்ப்

அமைதிக்கான நொபெல் பரிசு கடந்த ஆண்டு தமக்கல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தற்போது குமுறிவருகிறார்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒஹாயோ மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜனாதிபதி டிரம்ப் அது தொடர்பாகப் பேசினார்.

தாம் ஒரு நாட்டைக் காப்பாற்றியதாகவும், போர் ஏற்படாமல் தடுத்து ஓர் ஒப்பந்த்த்தை எட்டியதாகவும் அவர் சொன்னார்.

ஆனால், பரிசோ மற்றவருக்கு என்று டிரம்ப் பொடிவைத்துப் பேசினார். அது எந்த நாடு என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.

இருப்பினும் அவர் எத்தியோப்பியாவைத்தான் குறிப்பிடுகிறார் என்பது தெள்ளத் தெளிவு என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

கடந்த ஆண்டு அமைதிக்கான நொபெல் பரிசு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு(Abiy Ahmed) வழங்கப்பட்டதை அவர்கள் சுட்டினர்.

43 வயதுடைய அபி, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களால் நாடு சீர்குலைந்து கிடந்த நிலையில் 2018 ஏப்ரலில் ஆட்சிக்கு வந்தார்.

வந்த வேகத்திலேயே அவர், எத்தியோப்பியாவில் பல்வேறு தாராளமய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, சிறையிடப்பட்டிருந்த பல்லாயிரம் எதிர்க்கட்சிக்காரர்களை விடுவித்து அமைதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.

பக்கத்து நாடான எரித்திரியாவுடன் (Eritrea) பகையை மறந்து, அமைதியான முறையில் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததற்காக, அவருக்கு நொபெல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால், அணுவாயுதங்களை அகற்றத் தாம்தான் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை அணுகியதாகவும், அதற்காகவே தமக்கு நொபெல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் வெளிப்படையாகவே தமது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.