இலங்கைபுகைப்பட தொகுப்பு

அரசாங்கத்துடன் ஐ.தே.கவினர் விசேட கலந்துரையாடல்

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று (01) ஜனாதிப செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் மேலும் சிலர் இந்த கலந்துரையாடலில் அரசாங்க தரப்பில் பங்கேற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பசில ராஜபக்ஷ, அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, நிமல் சிறிபாலா டி சில்வா, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் அரசாங்க தரப்பில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணநாயக்க, அர்ஜுனா ரணதுங்க, ருவன் விஜேவர்தன, தயா கமகே, பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close