ஊடக அறம், உண்மையின் நிறம்!

அரச அனுசரணையுடன் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யை

பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யைகளை அரச அனுசரனையுடன் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல சிங்களத் திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ், தனது 99 ஆவது வயதில் நேற்று காலமானார்.

1919ஆம் ஆண்டு பிறந்த அவர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் திரைப்படத்துறைக்குள் பிரவேசித்தார்.

1956 ஆம் ஆண்டு அவரது முதலாவது திரைப்படமான “விதியின் கோடுகள்” என்று அர்த்தப்படும் “ரேகாவ” வெளிவந்தது.

சந்தேசய, கம்பெரலிய, கொளுகதவத்த, தாசநிசா, யுகாந்தய, வேகந்தவளுவ ஆகிய திரைப்படங்கள் அவரது இயக்கத்தில் வெளியாகிய முக்கியமான சிங்களத் திரைப்படங்கள் ஆகும்.

அவர் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பல்வேறு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.