அரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

51
colombotamil.lk

சம்பா மற்றும் நாட்டு அரிசிகளுக்காக அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் இந்த விலைக்கட்டுப்பாடு அமுலுக்க வரும் என, அமைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலைய 80 ரூபாயாகும. சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் அதிக பட்ச சில்லறை விலை 85 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுபோகத்தில் இருந்து ஒரு கிலகிராம் நாட்டு நெல் 40 ரூபாயாகவும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 43 ரூபாயாகவும் கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews