Saturday, January 25, 2020.
Home இலங்கை அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச்செய்ய நடவடிக்கை

அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச்செய்ய நடவடிக்கை

பல வருடங்களாக செயல்பட்டு வரும் அரை சொகுசு பஸ் சேவையில், பயணிகளுக்கு எந்த வசதிகளும் வழங்காமலும், பணத்தை சுரண்டுவதுமே அதிகளவில் காணப்படுவதால், அதனை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அரை சொகுசு பஸ்களின் ஜன்னல்களில் திரைச்சீலையை தொங்கவிட்டுள்ளமை மாத்திரமே பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒரே வசதி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுமார் 10 ஆயிரம் பயணிகளை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில், நூறு சதவீதமான பயணிகளும், அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது.

இது பொதுமக்களுக்கு எந்த வசதிகளையும் வழங்காத நிலையில், சாதாரண பஸ்களில் பயணிப்பதை விட அதிக செலவாகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பஸ்களில் ஒளிப்பரப்படும் பாடல்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் மற்றும் பொது போக்குவரத்து பஸ்களுக்கு தரமான பாடல்களைக் கொண்ட இறுவட்டுக்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரை செகுசு (SEMI LUXURY) பஸ் சேவை என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையிடும் குறித்த சேவை குறுகிய காலத்துக்குள் முழுமையாக இரத்துச்செய்ய இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

இதயும் பாருங்க...

விபத்தில் பெண் உட்பட இருவர் பலி

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து...

கேரள “டீ”க்காக ஆசைப்பட்டு காத்திருந்த ஓ.பி.எஸ்

சபரிமலைக்கு சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஊர் திரும்பும் வழியில் தேக்கடியில் காரிலிருந்து கொண்டே டீ வாங்கி பருகினார். சபரிமலையில் தரிசனம் முடித்த ஓ.பன்னீர்செல்வம் கேரள டீ குடிக்கவேண்டும் என அதிமுகவின் இடுக்கி...

போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல்

ஹட்டன், டிக்கோயா போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவலானது நேற்று (23) மாலை ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மலை உச்சியில் தீ வைக்கப் பட்டதாக...

ஒழுக்கத்தை மீறிய உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 20துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் கட்சியின்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!