அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவித்தல்

41
அர்ஜூன் மகேந்திரன்
W3Schools

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்துவது குறித்த ஆவணங்களை இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என வெளியாகும் செய்திகள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் விரைவில் ஜனாதிபதி நாட்டுக்கு மக்களுக்கு தெளிவுப்படுத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கைத்தொழில், சமூக வலுவூட்டல் மற்றும் விஷேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஆகிய அமைச்சுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, பாதீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

W3Schools