Wednesday, January 29, 2020.
Home வடக்கு - கிழக்கு அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் மாந்தை கிழக்கின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஓர் கிராமமாகக் காணப்படும் அம்பாள்புரம் கிராமத்தில், தற்போது 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த கிராமத்தில் நிலவும் வரட்சியால் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், வாழ்வாதாரத் தொழில்களும பாதிக்கப்பட்டுள்ளன.

வவுனிக்குளத்தை நம்பிய நன்னீர் மீன்பிடியும் விவசாயமும் இந்த மக்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள போதும், தற்போதைய வரட்சி இவ்விரு தொழில்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் இங்குள்ள மக்கள் ஒரு நேர உணவுக்கே கஷ்டப்படுகின்ற நிலமை காணப்படுகின்றது.

தற்போது நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை மீளச்செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன், பெருமளவானோர் வெளிமாவட்டங்களுக்கு வேலை தேடிச்சென்றுள்ளனர். இவ்வாறு, பல்வேறு நெருக்கடிகளை தாம் எதிர்கொள்வதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதயும் பாருங்க...

அடுத்த வாரம் பெரும்போக நெல் கொள்வனவு

பெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் ஆரம்பமாகவிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யும் பணி முதலில் ஆரம்பிக்கப்படும் என்று நெல்...

CIDயில் ஷானி அபேசேகர முன்னிலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (23) காலை 9 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுட சுட...

ரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று (24) காலை முன்னெடுத்தனர். சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ்...

டிக்கோயா சுற்றுலா விடுதியொன்றில் தீ

ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு சொந்தமான சுற்றுலா விடுதியொன்றில் இன்று (28) அதிகாலை தீ பரவியுள்ளது. கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் அமைந்துள்ள குறித்த சுற்றுலா விடுதியிலேயே இன்று...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...