ஆக்சன்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்சன் படம் வருகிற 15ஆம் திகதி திரைக்கு வருகிறது.

துருக்கி, அஜர்பைஜான், லண்டன் என பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் போலிருக்கு என்று ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், தற்போது ஆக்சன் படத்தின் பிரமோசனில் ஈடுபட்டுள்ள விஷால் அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த படத்தின் டிரெய்லரைப்பார்த்து விட்டு என்னிடத்தில் சில நண்பர்கள் படத்தின் பட்ஜெட் 200 கோடி இருக்குமா? என்று கேட்டார்கள்.

அதற்கு காரணம் பிரமாண்டம்தான். ஆனால், இந்த ஆக்சன் படம் ரூ. 60 கோடிக்குள் தயாரான படம். 88 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். இந்த படம் இயக்குநர் சுந்தர்.சியின் கனவு படமாகும்.

குறைந்த பட்ஜெட் டில் பிரமாண்ட படங்களை தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் சுந்தர்.சியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் விஷால்.