ஆக்‌ஷன்

நடிகர் விஷால் நடிப்பில், வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இருக்கும் ’ஆக்‌ஷன்’ படத்துக்கு பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பேனர் கவிழ்ந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து அரசியல் கட்சிகள் பேனர் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களை வற்புறுத்தி வருகின்றன.

இதே போல முன்னணி ஹீரோக்களும் தங்கள் பட வெளியீட்டின்போது, கட் அவுட், பேனர்கள் வைக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். அண்மையில் வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களுக்கு பேனர் வைக்கப்படவில்லை.

இந்தநிலையில், சுந்தர்.சி இயக்கத்தில், விஷால், தமன்னா நடித்துள்ள ’ஆக்‌ஷன்’ படம் வரும் 15 ஆம் திகதி வெளியாகிறது. அன்று, பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஆகும் செலவுகளை ஏழை, எளியோருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த இயக்கத்தின் செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.