Sri Lanka 24 Hours Online Breaking News

ஆயிரத்தில் ஒருவன் 2: காத்திருக்கும் பார்த்திபன்

0

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் பார்த்திபன் கதாநாயகர்களாக நடித்து வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

அந்தப் படத்தில் சோழ – பாண்டிய மன்னர்கள் குறித்த வரலாறு கதைக்களமாக இருந்தது. ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்றுவரை இருந்து வருகிறது. இது தொடர்பாகப் படக் குழுவினரிடமும் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் வீடியோ ஒன்றில் மூலம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
உங்களைப் போன்றே நானும் அதை மிகவும் எதிர்பார்க்கிறேன். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் உருவாக்கம் இயக்குநர் செல்வராகவன் கையில்கூட இல்லை. முழுக்க முழுக்க அது தயாரிப்பாளர் கையில்தான் உள்ளது.

சினிமா என்பது ஒரு மிகப் பெரிய வியாபாரம். எத்தனை கோடி ரூபாய் போட்டால் எத்தனை ரூபாய் வரும் என்னும் பிசினஸ். இன்றைக்கு இருக்கிற ஆர்வத்துக்குப் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்பது எனக்கே நன்றாகத் தெரியும்.

அத்தனை பெரிய எதிர்பார்ப்பு ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் மீது உள்ளது. நானும் ஆவலுடன் அதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது மிகப்பெரிய வருத்தம்தான். நாம் ஒரு வேலையைச் செய்யும்போது முழு ஈடுபாட்டோடு சிறப்பாகச் செய்ய வேண்டும். அதனால்தான் படத்தில் இடம்பெற முடியாமல் போனது.

அண்மையில் பொன்னியின் செல்வன் கதையின் காமிக்ஸ் புத்தகங்களைப் பார்த்தேன். அதை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

அதைப் பார்த்ததும் அவர் எனக்குப் பதில் அனுப்பினார். ‘இந்த காமிக்ஸ் கதையின் அளவுக்காவது பொன்னியின் செல்வன் படத்தை நான் எடுத்து விடுவேன் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்றும் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like