எங்க வீட்டு மாப்பிள்ளை

பிரபல தொலைக்காட்சியில் ஆர்யா பங்குபெறும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் ஆர்யாவுக்காக கலந்து கொண்டு அவருடன் பழகி வருகின்றனர்.

இறுதியில் ஆர்யா யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி அந்த 16 பெண்களுடன் சாதாரணமாக கலந்துரையாடியுள்ளார்.

அப்போது 16 பெண்களில் வரலட்சுமி, ஸ்வேதா-சூசன்னாவை ஆர்யாவுக்காக தேர்வு செய்தார். சூசன்னா விவாகரத்து பெற்ற ஒரு இலங்கை பெண் என்பது குறிப்பிடத்தக்கது.