ஆஷஸ் 4ஆவது டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இதயும் பாருங்க

ஆபாச இணையத்தில் குடும்ப பெண்களின்பெண்களின் டிக் டாக்..!

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி,...

ஆடியோ ரிலீஸில் ஆளுங்கட்சியை எச்சரித்த விஜய்

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சூசமாக தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள...

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 4ஆம் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன.

அடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் (0), கேப்டன் ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்து திண்டாடியது. 4-வது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘டிரா’ செய்யும் நோக்குடன் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.

6 விக்கெட்டுக்கு 136 ரன்களுடன் பரித்தவித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ் பட்லரும், கிரேக் ஓவர்டானும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (34 ரன், 111 பந்து, 4 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் (1 ரன்) நிலைக்கவில்லை.

முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் தரவரிசை இந்தியா முதலிடம்; இங்கிலாந்து முன்னேற்றம்

ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரட்டை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 12-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

இந்த வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This