ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஆஸ்திரேலியக் காட்டுத் தீ: 1.25 பில்லியன் விலங்குகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயில் இரையான விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச வனவிலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை வாட்டி வரும் கடுமையான காட்டுத் தீயால் சுமார் 1.25 பில்லியன் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று அமைப்பு கூறியது.

கடந்த ஆண்டு செப்டெம்பரிலிருந்து எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2000க்கும் அதிகமான வீடுகள் தீயில் கருகின.

வறட்சி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பாளர்கள் அதிக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிரீஸில் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத்தீ

Leave A Reply

Your email address will not be published.