முறுக்குமீசை

“நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை அடுத்து, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்காக தல அஜித் வித்தியாசமான கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அஜித்தின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அஜித் முறுக்கு மீசையுடன் உள்ளார். ‘தல 60’ படத்தில் அஜித் பொலிஸ் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் இந்த முறுக்குமீசை கெட்டப் பொலிஸ் கேரக்டருக்கு பொருத்தமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

‘தல 60 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசெம்பர் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வையில் பரத் சுப்ரமணியம் பெயர் எங்கிருந்து வந்தது தெரியுமா?

விஸ்வாசத்தில் அஜீத் வாழ்வின் உண்மை சம்பவம்!