இணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

100
Thanos
colombotamil.lk

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

லகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கூகுளையும் விட்டுவைக்கவில்லை.

எண்ட்கேம் திரைப்படம் வெளியானதில் இருந்து இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலகம் முழுக்க அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான சினிமா டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது.

இந்நிலையில் புதிய மார்வெல் திரைப்படம் பற்றிய தேடல்களில் அவெஞ்சர்ஸ் அபிமானிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

இவர்களை குஷிப்படுத்த கூகுள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வில்லன் கதாபாத்திரமான தானோஸ்-ஐ தேடுபவர்களுக்கு கூகுள் சுவாரஸ்யம் அளிக்கிறது.

அந்த வகையில் கூகுளில் ‘Thanos’ என டைப் செய்து பின் திரையின் வலதுபுறம் இடதுபக்கத்தில் தோன்றும் நவரத்தின கற்களை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும் தானோஸ் கையுறை தானாக விரல்களை மடித்துக் கொண்டு சொடக்கு போடும். பின் கூகுள் தேடல் பக்கத்தில் தோன்றிய பதில்கள் மேலும், கீழுமாக ஒவ்வொன்றாக காற்றில் மறைந்து போகிறது.

மீண்டும் தானோஸ் கையில் இருக்கும் நட்சத்திர கற்களை க்ளிக் செய்ததும் மறைந்து போனவை திரையில் தோன்றுகிறது.

தானோஸ் கதாபாத்திரம் திரைப்படத்தில் செய்த நடவடிக்கைகள் கூகுள் தேடலில் அப்படியே பிரதிபலிப்பது அவெஞ்சர்ஸ் ப்ரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என தெரிகிறது.

அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முந்தைய பாகத்தில் தானோஸ் கதாபாத்திரம் நவரத்தின கற்களை கொண்டு உலகின் பாதி மக்கள் தொகையை ஒரே சொடக்கில் அழித்து விடுவார்.

இந்நிலையில், எண்ட்கேம் திரைப்படம் வெளியானதையொட்டி கூகுளில் தானோஸ் சொடக்கு செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது கூகுள் செய்வோருக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதோடு மட்டுமின்றி, திரைப்படத்திற்கும் ஒருவித விளம்பரமாக மாறியிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!