Sri Lanka 24 Hours Online Breaking News

“இதயத்தில் போட்டியிட்டால் இருப்பதும் இல்லாமலாக்கிவிடும் ”

0

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் அல்லாமல் வேறு எந்த சின்னத்திலும் போட்டியிட தாம் தயாராக இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு கூறுகையில், “வரும் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதே கட்சியில் உள்ள அனைவரினதும் விருப்பம்.

தேவையானால் கட்சிக்குள் வாக்கெடுப்பை நடத்தலாம். அதைவிடுத்து இதய சின்னத்திலோ அல்லது வேறு எந்த சின்னத்திலோ போட்டியிட்டால் கடந்த தேர்தலை விட படுதோல்வியை சந்தித்து இருப்பதையும் இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டி வரலாம்.

என்னைப் பொறுத்தவரை யானை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் நான் போட்டியிட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like