32 C
Colombo
Thu, 09 Apr 2020 03:48:42 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

  இந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்!

  COVID-19

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பிற்கு இடையே ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்று வருகிறது.

  பல நூறு குதிரைகள், வீரர்கள் சேர்ந்து பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளை தனித்தனியாகப் படமாக்கி வந்தனர். ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிலர் எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் படப்பிடிப்புக்கு இடையே பெரும் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

  இண்டஸ்ட்ரியல் கிரேன் எனப்படும் மிகப்பெரிய கிரேனைப் பயன்படுத்தி அங்கு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. கிரேன் முழுமையாக நகர்த்தப்பட்டதன் பின்னரே அதனை மேலே ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ஆனால் ஒவ்வொரு முறையும் கிரேனை கீழே இறக்கி, அதனை நகர்த்தி பின்னர் மீண்டும் மேலே ஏற்றுவது என்பது படப்பிடிப்புக்கு அதிக சிரமமான வேலையாக இருந்து வந்தது.

  இந்த நிலையில் நேற்று (19) ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அறிவுறுத்தலையும் மீறி 150 அடி உயரத்தில் கிரேன் மேலே இருக்கும் நிலையிலேயே அதனை நகர்த்துவதற்கு முற்பட்டுள்ளனர்.

  ஆனால், அதிக பாரம் கொண்ட கிரேன் எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்தது. அதில் கீழே பலருக்கும் பெரும் காயங்கள் ஏற்பட்டது.

  இந்த கோர விபத்தில் ஒரு உதவி இயக்குநர், புரொடக்‌ஷன் டீமில் வேலை பார்க்கும் ஒருவர், ஒரு செட் அசிஸ்டன்ட் என மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

  மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  விபத்து நடந்த இடத்தில் இருந்து வெறும் 4 அடி தொலைவில் இருந்த கமல்ஹாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில் கமல்ஹாசனை உடனடியாக அவரது வீட்டிற்கு செல்ல அனைவரும் வற்புறுத்தினர்.

  ஆனால் அவர் அங்கிருந்து செல்வதற்கு மறுத்துவிட்டார். மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான கமல்ஹாசன் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினார்.
  ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உதவி புரிந்தார்.

  இந்த சம்பவம் சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

  மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

  பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...