Wednesday, January 29, 2020.
Home விளையாட்டு இந்தியா அணியின் பந்து வீச்சில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்

இந்தியா அணியின் பந்து வீச்சில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்

India West Indies 2019 Series : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

அடுத்து இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

இதில் நாணயசுழ்றிசில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டம் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 280 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களம் இறங்கினர்.

12ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தாமதாக தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், அஹமது, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதயும் பாருங்க...

கோபப்பட்ட கங்கணா: எஸ்கேப் ஆன ரிச்சா

தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இந்தி நடிகை கங்கணா ரணாவத், தனது வெளிப்படையான பேச்சினால் பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். தற்போது தனது ‘பங்கா’ எனும் புதிய...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 100...

டெலிகொம் நிறுவன புதிய தலைவரான ரொஹான் பெர்ணான்டோ

தேயிலை ஏற்றுமதியாளர் ரொஹான் பெர்ணான்டோ ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேச சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியில் வைத்து நேற்று (26) இரவு 7 மணியளவில் இந்த வாள் வெட்டுத் தாக்குதல்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...