நியூசிலாந்து

இந்தியா மற்றுத் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.

இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் மழை குறிக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால் வெற்றி தோல்வி முடிவை நிர்ணயம் செய்ய மாற்றுநாள் எனப்படும் ரிசர்வ் டே என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.

அதன் அடிப்படையில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.