Sri Lanka 24 Hours Online Breaking News

இந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றுமா ?

0

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்துக்குப் பயணமாகி விளையாடிவரும் இந்திய அணி டி20 தொடரில் வென்றிருந்தாலும், ஒருநாள் தொடரை இழந்துவிட்டது.

முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் தொடரை இழந்திருந்தாலும், மேலும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரை இழந்தது இழந்ததுதான். ஆனால், மீதமிருக்கும் இந்த ஒரு போட்டியையாவது வென்றுவிட வேண்டிய சூழலில் இருக்கிறது இந்திய அணி.

நியூசிலாந்தின் வெற்றி என்பது, சாதாரணமாக ஒரு தொடரில் பெற்றது மட்டுமே கிடையாது. உலகின் தலைசிறந்த அணிகள் பலவற்றைத் தோற்கடித்து, 2019 மார்ச் முதல் 2020 பிப்ரவரி வரை ஒரு தொடரில்கூட தோல்வியடையாமல் இருந்தது இந்திய அணி.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு, யாராலும் தோற்கடிக்க முடியாத அணியாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியைத் தோற்கடித்து, ஒரு வரலாற்றுச் சாதனையைத் தடுத்திருக்கிறது நியூசிலாந்து.

எப்படியும் தடுத்துவிட்டார்கள்; இனி ஏன் இந்தப் போட்டியைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று கேட்க முடியாது. காரணம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் சாதனையை மட்டும் நியூசிலாந்து தடுக்கவில்லை.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியைத் தலைமையேற்று நடத்தி வந்த பல கேப்டன்களின் கடும் உழைப்பினாலும், தீவிர முயற்சியினாலும் தொடர் முழுவதிலும் வொயிட் வாஷ் (தொடரின் ஒரு போட்டியில்கூட வெற்றிபெறாமல் தோற்பது) செய்யப்படாத அணியாக கடந்த 2006 முதல் இருந்து வருகிறது இந்திய அணி.

2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் செய்த ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று கொடூரமான தோல்வியைச் சந்தித்தது.

சச்சின், கைஃப், தோனி, தினேஷ் மோங்கியா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் ஆகிய டாப் ஆர்டர் பிளேயர்களைக் கொண்டிருந்தும், மிக சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து, சுவாரஸ்யமில்லாத போட்டியை வழங்கி இந்தியா தோற்றுப்போனது.

அதன்பின் விளையாடிய எந்தவொரு ஒருநாள் தொடரிலும், அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா தோற்றதில்லை. இந்த வரலாற்றையாவது மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது இந்திய அணி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like