Latest news from around the world

இந்திய ஆயுதப் படை விமானம் மாயம்

இந்திய ஆயுதப் படையின் An-32 சரக்கு விமானம் அருணாச்சலப் பிரதேசத்தில் மாயமாகியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அசாமிலிருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணி அளவில் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் புறப்பட்டுச் சென்று விமானம், இறுதியாக பிற்பகல் 1 மணிக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பில் இருந்துள்ளது.

விமானத்தில் 8 அதிகாரிகளும் 5 பயணிகளும் இருந்ததாக ‘தி ஹிந்து’ நாளேடு தெரிவித்துள்ளதுடன், விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்திய ஆயுதப் படை அதிகம் பயன்படுத்தும் அந்த ரக சரக்கு விமானம் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.

உக்ரேனுடன் 2009இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்கீழ் விமானங்களை மேம்படுத்தி அவற்றின் ஆயுள்காலத்தை 40 ஆண்டுகள் அதிகரிக்க இணக்கம் காணப்பட்டது.

அதன்படி இதுவரை 46 விமானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 40 விமானங்கள் உக்ரேனிலும் எஞ்சியவை இந்தியாவிலும் மேம்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.