இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம்

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் தொடர்பில் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கான ஒருமைப்பாட்டையும், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினமான நேற்று அவர் உரையாற்றினார்.

இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர நாளான இன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிடுகிறது.

அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை இந்தியா ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.