32 C
Colombo
Mon, 06 Apr 2020 03:47:04 +0530

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை

கொரோனோ சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ் போதனா...
More

  இனி இருந்த இடத்திலிருந்தே வாக்களிக்கலாம்!

  COVID-19

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

  கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

  இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

  கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

  இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

  வாக்களிக்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர இந்திய தேர்தல் ஆணையம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

  தேர்தலில் வாக்களிக்கும் முறையை மேம்படுத்துவது தொடர்பாக புதிய சீர்திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

  இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ‘தோ்தலில் வாக்களிக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காகப் பணியாற்றி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

  இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்தல் ஆணையம் ஐஐடி மெட்ராஸின் ஒத்துழைப்புடன் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி வருகிறது.

  இதன்மூலம் வாக்காளர்கள் தங்களது தொகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்காமல் தொலைதூர நகரத்திலிருந்தே வாக்களிக்கலாம்” என்று தெரிவித்தார்.

  முன்மாதிரி நோக்கத்துடன் உருவாக்கப்படும் இந்தத் திட்டமானது தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையில் உள்ளது என்று மற்றொரு தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  இந்தத் தொழில்நுட்பம் தொடர்பாக பிடிஐ ஊடகத்திடம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த உதவி ஆணையர் சந்தீப் சக்சேனா, ‘இரு வழி எலெக்ட்ரானிக் வாக்களிக்கும் முறை’ உருவாக்கப்பட இருப்பதாகவும் இது தனி இணைய வழித்தடத்தில், பயோமெட்ரிக் சாதனங்கள், வெப் கேமரா உதவியுடன் இயங்கும் வகையில் இருக்கும் எனவும் கூறினார்.

  மேலும், “மக்களவைத் தேர்தலில் சென்னையைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் டெல்லியில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது தொகுதியில் வாக்களிக்க சென்னை திரும்புவதோ அல்லது வாக்களிப்பதைத் தவிர்ப்பதையோ இது தடுக்கும்.

  அதாவது, டெல்லியில் தான் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாக்களிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

  இது வீட்டிலிருந்து வாக்களிக்கும் முறையை அர்த்தப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டவர், “இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு வாக்காளர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நியமிக்கப்பட்ட இடத்தை அடைய வேண்டும்.

  இது ‘எந்த நேரத்திலும் – எந்த இடத்திலும் – எந்த சாதனமும்’ என்ற தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்க இன்னும் சிறிதுகாலம் தேவைப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

  இந்த முறையின் மூலம் வாக்குப் பதிவு அதிகரிப்பதுடன், வாக்காளருக்குப் பயணச் செலவையும் மிச்சப்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

  சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

  கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

  இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

  கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

  இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest...