ஊடக அறம், உண்மையின் நிறம்!

இன்னொரு வளைகுடா போர்? அதிகரிக்கும் பதற்றம்!

ஈரான் நாட்டின் ராணுவத் தலைவர் சுலைமானியைக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

சுலைமானி கொலைக்குப் பழி தீர்த்தே தீருவோம் என்று ஈரான் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா மீது மேலும் கைவைத்தால் ஈரான் நாட்டின் 52 தளங்கள் இப்போது குறிவைக்கப்பட்டு விட்டன. தாக்குதல் மிக வேகமாக, மிகக் கடுமையாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

ஈரான் நாட்டின் இரண்டாவது முக்கிய அதிகாரத் தலைவரான ஜெனரல் காசெம் சுலைமானியை அமெரிக்கா ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதலில் கொலை செய்தது.
ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட சுலைமானியின் இறுதி ஊர்வலம் மிக பதற்றத்துடன் நடந்தது.

சுலைமானியின் கொலைக்குப் பின் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அருகே ராக்கெட்டுகள் வந்து விழுந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் இதுகுறித்து ஈரானுக்குக் கடுமையான பதில் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவின் சில இடங்களை ஈரான் குறிவைத்திருப்பது தெரிகிறது. அமெரிக்கா மீது கைவைத்தால் ஈரானின் 52 இடங்களில் அமெரிக்கா மிக விரைவில் மிகக் கடுமையாகத் தாக்குதல் நடத்தும். அமெரிக்கா இனி அச்சுறுத்தல்களை விரும்பவில்லை!” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த 52 இடங்களைக் குறிவைப்பதற்கு ஒரு பின்னணி சொல்லப்படுகிறது. “1979இன் பிற்பகுதியிலிருந்து ஒரு வருடத்துக்கும் மேலாக ஈரானில் பிணைக் கைதிகளாக வைத்திருந்த 52 அமெரிக்கர்களை நினைவுபடுத்தும் விதமாகத்தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

பாக்தாத்தில் சுலைமானிக்கு மிக பிரமாண்ட இறுதி ஊர்வலம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்குப் பின் ட்ரம்ப் இந்த ட்விட்டுகளைச் செய்துள்ளார். ஈராக் தலைநகருக்கு வடக்கே அமெரிக்கப் படைகள் இப்போது நிலைகொண்டுள்ளன.

இன்னொரு வளைகுடா போர் நடக்குமோ என்ற பதற்றம் ஈரானில் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.