32 C
Colombo
Thu, 09 Apr 2020 03:18:58 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

  இன்றிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு

  COVID-19

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

  இந்தியாவில் இன்றிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி நாட்டு மக்ககளுக்கு தெரிவித்துள்ளார்.

  கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது.

  இந்தநிலையில் பாரத பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொதுமக்கள் தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே கொரோனா வைரசை விரட்ட முடியும் என்று தெரிவித்த அவர், 22ஆம் திகதி பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  அதன்படி நேற்று முன்தினம் நாடு தழுவிய சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருந்தாலும் இந்தியா முழுவதும் பொதுமக்கள் அதை சரியாக கடைபிடிக்கவில்லை.

  பொதுஇடங்களில் அதிக அளவில் கூடினர். இதனால் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுருந்தது. அதனடிப்படையில் பெரும்பாலான மாநிலங்கள் ஊடரங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

  இந்நிலையில் இன்று பாரத பிரதமர் மோடி 2-வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  1. 22ஆம் திகதி நடைபெற்ற சுய ஊரடங்கு வெற்றிகரமான நடைபெற ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி

  2. கொரோனாவை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகல் தவிர்க்க முடியாதது. இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி. தம்மை தாக்காது என யாரும் நினைக்க வேண்டாம்.

  3. இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு மக்களும் எனக்கு முக்கியம். இதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு மோடி உரையில் கூறினார்.

  Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

  மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

  பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...