ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

அமைச்சரரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள போதும், தங்களது சம்பள பிரச்சினையை தீர்க்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து வாராந்தம் தொடர்ந்து போராட்டத்தை நடத்தவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தை ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் நடத்தி இருந்தனர்.

போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படும் போராட்டம் நாளை நள்ளிரவு வரையில் தொடரும் என்று, ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.