Sri Lanka 24 Hours Online Breaking News

இன்றைய ராசிபலன் 11.02.2020

0

இன்றைய ராசிபலன் 11.02.2020

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச்செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

ரிஷபம்: எதிர்ப்புகளை மீறி முன்னேறி செல்வீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பாலிய நண்பர்களின் உதவி கிடைக்கும். யோகா, தியானம் என மனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி லாபம் பெறுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாளாகவராத பணம் கைக்கு வந்து சேரும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனம் அமைதியற்ற நிலையில் கவலையுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்திக் கொள்வது நல்லது.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங் கும். விழிப் புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: எதிலும் அலைச்சலும் பிரச்சனைகளும் உருவாகும். சின்ன சின்ன அவமானங்கள், ஏமாற்றங்கள் வந்து போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

துலாம்: உங்கள் சிந்தனை திறன்வெளிப்படும். முயற்சிகள் அனைத் தும் வெற்றி பெறும். நண்பர்கள் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்க ளுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் மற்றவர்களால் புகழப்படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களை மேம்படுத்தி கொள்வீர்கள். மனைவி வழியில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

தனுசு: உங்கள் சூழ்நிலை அனைத்திலும் புதிய மாற்றங்கள் ஏற்படும். தடைகள் விலகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரவு கிடைக்கும். நல்ல மாற்றங் கள் ஏற்படும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சிறு சிறு பிரச்சினைகளும் மன கலக்கங்களும் ஏற்படும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்க போராடுவீர்கள். பதட்டத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்

இன்றைய ராசிபலன் 26.01.2020

கும்பம்: உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெறுவீர்கள். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். வெற்றியுடன் செயல்படும் நாள்.

மீனம்: அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு மரியாதை தருவார்கள். உத்தியோகத்தில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

இன்றைய ராசிபலன் 11.02.2020

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like