இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லுடன் நால்வர் கைது

35
W3Schools

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் ஒன்றுடன் நான்கு பேர், ஹோமாகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணிக்கக்கல் வியாபாரியொருவரை கடத்திச்சென்று 50,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸாரிடம் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் நீர்கொழும்பு நகரில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

W3Schools