தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி,பாலக்கோடு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் விடிய விடிய சாரல்மழை பெய்தது. இதனால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனத்தாலும், மேற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியாலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play