இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

பொகவந்தலாவை, பெற்றசோ தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சந்தேக நபர்கள் நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை பகுதியை சேர்ந்த 21 – 32 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் ஹட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts