ஊடக அறம், உண்மையின் நிறம்!

இராணுவ தளத்தை வீடியோ பதிவு செய்த இருவர் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ரத்னுசக் பகுதியில் ராணுவ முகாமை படம்பிடித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகாம் அருகே சுற்றி திரிந்த மர்ம நபர்கள் 2 பேர், முகாமை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்ததால் அவர்களை இராணுவத்தினர் விசாரித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்த வீடியோ கேமராவை பரிசோதனை செய்த போது, அதில், ராணுவ முகாம் குறித்த விவரங்கள், வீடியோ காட்சிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.