Wednesday, January 29, 2020.
Home இலங்கை இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார்.

இலங்கை இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா செயற்பட்டு வந்த நிலையில், லெப்டினட் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டு இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட சவேந்திர சில்வா, தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது, 53ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்தார்.

ஷவேந்திர சில்வா, வீர விக்கிரம பதக்கம், உத்தம சேவா பதக்கம், ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் ஆகிய விருதுகளை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதயும் பாருங்க...

போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல்

ஹட்டன், டிக்கோயா போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவலானது நேற்று (23) மாலை ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மலை உச்சியில் தீ வைக்கப் பட்டதாக...

“இதுதான் கொரோனா வைரஸ்!” – சீனா வெளியிட்ட படம்

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அதிகாரபூர்வமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைவிட, சுமார் 1 இலட்சம் மக்கள் ஏற்கெனவே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம் என மருத்துவ ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த...

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவது இடைநிறுத்தம்

சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ்...

நுவரெலியாவில் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கிய கூட்டம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானிக்கவுள்ளது. அதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டம் இன்று (27) நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...