இரு தரப்புக்கு இடையிலான மோதலில் அசிட் வீச்சு – 9 பேர் வைத்தியசாலையில்

29
W3Schools

கம்புறுப்பிட்டிய ஒமாரஹேன பகுதியில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 9 பேர் அசிட் வீச்சுக்கு உள்ளாகியுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்டுள்ள வாய்த்தர்க்கர்கம் மோதலாக உருவெடுத்துள்ளது.

இதன்போது, அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டதுடன், மோதல் இடம்பெற்ற வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் ஒன்று சந்தேக நபர் ஒருவரால் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மாத்தறை அக்குரஸ்ஸ மற்றும் கம்புறுப்பிட்டிய வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்புறுப்பிட்டிய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

W3Schools