ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று (06) காலை 11 மணியளவில் விஷேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது நள்ளிரவுடன் நிறைவு