முகமது ஹஸ்னைன்

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

அடுத்து டி-20 தொடர் நடக்கிறது. முதல் டி-20 போட்டி, லாகூரில் நேற்று நடந்தது.

இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் பானுக ராஜபக்ச, துசான் சனகா, சேஹன் ஜெயசூர்யா ஆகியோரின் விக்கெட்டுகளை ஹாட்ரிக்-காக வீழ்த்திய, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் சாதனை படைத்துள்ளார்.

மிகக் குறைந்த வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவரது வயது 19. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், தனது 20 வது வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை