ஊடக அறம், உண்மையின் நிறம்!

இலங்கையின் பிரபல இயக்குநர் காலமானார்

 

பிரபல திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான தர்மசேன பதிராஜ, 74 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிக்கொண்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

1974 ஆம் ஆண்டு “அஹஸ் கவ்வ” எனும் திரைப்படத்தின் இயக்குனராக திரையுலகில் பிரவேசித்த அவர், இலங்கையின் முதல் தமிழ் திரைப்படமாக கருதப்படும் “பொன்மணி” எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

“எயா தெங் லொகு லமயெக்” மற்றும் “பம்பரு அவித்” போன்ற பிரசித்தி பெற்ற சிங்கள திரைப்படங்கள் இவருடைய படைப்புகளே.

திரைப்படம் தொடர்பில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது திரைப்பட இயக்குநர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.