இலஞ்சம் பெற்ற முகாமையாளர் கைது

இலஞ்சம் பெற்ற முகாமையாளர் கைது

இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த முகாமையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாவலி அதிகரசபையின் அங்குணுகொலபெலஸ்ஸ முரவெசிஹேன அலுவலகத்தின் முகாமையாளரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

5000 ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த நிலையில், நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts