Saturday, January 25, 2020.
Home இலங்கை இலஞ்ச ஒழிப்பு விடயத்தில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

இலஞ்ச ஒழிப்பு விடயத்தில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

ஊழல் ஒழிப்பு விடயத்தில் நாட்டு மக்களில் நூற்றுக்கு 47 சதவீதமானவர்களே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தின் மீது நூற்றுக்கு 73 சதவீதமானவர்களும் பொலிஸார் மீது நூற்றுக்கு 57 சதவீதமானவர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளதுடன், தேவைகளை விரைவாக நிறைவேற்றுவதற்காக இலஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என்ற எண்ணத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பதிலளித்தோரில் அதிகமானவர்கள் ஊழலின் ஒரு வடிவாமாக பாலியல் இலஞ்சம் இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அரச அதிகாரிகளினால் அரச சேவைகளை வழங்கும் போது பிரதிபலனாக பாலியல் சலுகைகள் சிலவேளைகளில் அல்லது அடிக்கடி பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவை கிராமப்புற மக்களிலும் பார்க்க நகரப்புற மக்களிடம் அதிகம் கோரப்பட்டுள்ளது. எனினும், கிரமமப்புற மக்களிலும் பார்க்க தோட்டப்புற மக்கள் மிகவும் இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாக உள்ளனர் என்பதை தரவுகள் காட்டுகின்றன.

இலஞ்சம் ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று இயங்குகின்றது எனும் விடயத்தை நூற்றுக்கு 86 சதவீதமானவர்கள் அறிந்திருந்தாலும், அதில் நூற்றுக்கு 72 சதவீதமானவர்களுக்கு எவ்வாறு முறையிடுவது என்பது தொடர்பில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

இதயும் பாருங்க...

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர், தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று...

கொரோனோ கிருமி தொடர்பில் கடும் அவதானம்

சீனாவில் வூஹான் நகரில் பரவி வரும் புதிய கொரோனோ கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளர் எவரும், இலங்கைக்கு வந்துள்ளனரா என்பது தொடர்பில் கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர்...

‘தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பிப்பது உசிதமானது’

மத்திய வங்கியின் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய தடயவியல் கணக்கறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பது உசிதமானது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இன்றைய சபை அமர்வின்போது சபாநாயகரால் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம்,...

வவுனியா விபத்தில் பெண் காயம்

வவுனியா ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (19) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குருமன்காடு பகுதியிலிருந்து ரயில் வீதியூடாக வவுனியா நகர்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!