இ.தொ.கா, பொகவந்தலாவை , லெட்சுமி தோட்ட மேல்பிரிவு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஆர்ப்பாட்டம் , நோர்வூட் பிரதேசசபை

பொகவந்தலாவை , லெட்சுமி தோட்ட மேல்பிரிவு மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

லெட்சுமி மேல்பிரிவு தோட்டத்தில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பிரதேசசபையின் இ.தொ.கா வின் கெர்கசோல்ட் வட்டார உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டோர் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சென்ற பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்ததன் பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.