ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

67
colombotamil.lk

ஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகள் மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்காக அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை மீற இருப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், ஈரானுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும் நோக்கில், புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்திருக்கின்றது.