ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஈரான் மீது புதிய தடைகள் அறிவிக்கப்படும்: ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்குத் தண்டனையாக புதிய தடைகளை விதிப்பதன் மூலம் நெருக்கடி அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்தவாறு உரையாற்றிய அவர், ஈரான்மீது ஏற்கெனவே உள்ள கடுமையான பொருளியல் தடைகளுக்கு மேல் புதிய தடைகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக சொன்னார்.

இருப்பினும், 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட அணுவாயுத உடன்பாடு குறித்து ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்த அவர் இணக்கம் தெரிவித்தார்.

ஈராக்கில் உள்ள இரண்டு ஆகாயப்படைத் தளங்கள்மீது பதில் தாக்குதல் நடத்தியதையடுத்து ஈரான் அதன் தாக்குதல்களைக் கைவிடுவதுபோல் தோன்றுகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஈரானிய படைகளால் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் கொல்லப்படவோ காயமடையவோ இல்லை என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.