உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? இது உங்களுக்கு!

24
உடற்பயிற்சி
W3Schools

இருபது விநாடிகளுக்குள், வேகமாக மாடிப்படிகளை ஏறும் பயிற்சி உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பயிற்சியை ஒரு நாளில் பலமுறை செய்யவேண்டும்.

அலுவலகக் கட்டடத்தில் இருந்தவாறு அலுவலக உடைகளில் உடற்பயிற்சி செய்ய இந்தப் பயிற்சி வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

இதனால், உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் இல்லை, பணம் இல்லை, உடை இல்லை என்று பல சாக்குகளைக் கூறுபவர்களுக்கு மாடிப்படிகளை வேகமாக ஏறுவது ஒரு சிறந்த உடற்பயிற்சி.

குறைந்த நேரத்தில் உடலுக்கு அதிக பயிற்சியை அளிக்கும் இந்த நடவடிக்கையை, கனடாவின் ஒன்டாரியோ நகரத்தில் உள்ள ஹாமில்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மக்களுக்கு எளிமையானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ள ஓர் உடற்பயிற்சி முறையை அவர்கள் தேடி வந்தனர்.

நாளில் பலமுறை சிறிய அளவுகளில் தின்பண்டங்களை உண்பது போல் ஒரு நாளில் பல முறை, குறுகிய நேரத்திற்குள் மாடிப்படி ஏறும் பயிற்சியைச் செய்யவேண்டும்.

ஆய்வின் முடிவுகள் இந்த மாதத்தின் Applied Physiology, Nutrition, and Metabolism சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

இந்த உடற்பயிற்சி முறை பயன் தருமா என்பதை அறிந்துகொள்ள ஆய்வாளர்கள் தொடக்கத்தில் சிறிய குழுவில் சோதனை மேற்கொண்டனர்.

ஆறு வாரங்கள் நீடித்த சோதனையின் இறுதியில், சோதனையில் ஈடுபட்டவர்கள், உடலைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை 5 விழுக்காடு அளவு அதிகரித்தது.

தொடர்ந்து இந்த உடற்பயிற்சி முறை சோதனை செய்யப்படும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

W3Schools