உணவுகளால் அலர்ஜி

உணவுகளினால் ஏற்படும் அலர்ஜியை கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். அதற்கு காரணம் அதனை நாம் உணவுநஞ்சேறல் என்று தவறாக நினைத்திருப்போம். இருப்பினும் உணவுநஞ்சேறலுக்கும் உணவுகளினால் ஏற்படும் அலர்ஜிக்கும் அடிப்படை வேறுபாடுகள் பல உள்ளது.

உணவு நஞ்சேறல் என்பது தூய்மையற்ற உணவுகளை உட்கொள்வதினால் ஏற்படுவது. ஆனால் உணவுகளினால் ஏற்படும் அலர்ஜி என்பது சில உணவுகளின் மீது ஏற்படும் விடாப்பிடியான எதிர் விளைவு.

அதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் மீது எதிர் விளைவை உண்டாக்கும். தங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு, ஒரு உணவை, உணவாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், அந்த உணவை உட்கொள்ளும் போது ஒருவருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் அதனை அச்சுறுத்தல் வகையில் சேர்க்கப்படுகிறது. அதனால் அந்த உணவுகள் உங்கள் உடலில் நிழைய முற்படும் போது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி செயலாற்ற தொடங்கி விடும்.

பொதுவாக பசும்பால், முட்டை, மீன், கடலை பருப்பு, ஷெல் மீன், சோயா மற்றும் கோதுமை போன்ற சில உணவுகளால் அலர்ஜி உண்டாகும். ஒருவருக்கு ஏதாவது ஒரு உணவு அல்லது பல உணவுகளாலும் அலர்ஜி ஏற்படலாம்.

சில நேரம் இது மிகவும் ஆபத்தை உண்டாக்கிவிடும். அதனால் அவைகளை தவிர்க்க, சில பேர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கின்றனர்.

ஏனெனில் மூக்கு ஒழுகுதல், மூக்கடைத்தல், தும்மல், இருமல், மூச்சிறைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற சுவாச பிரச்சனைகளையும் கூட சில சந்திக்க வேண்டி வரும். உணவுகளினால் ஏற்படும் அலர்ஜியினால் சில ஆண்கள் இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.

அதனால் இரத்த அழுத்தம், லேசான தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகளையும் சிலர் சந்திப்பார்கள். பல சூழ்நிலைகளில், எவ்வளவு கவனமாக இருந்தாலும் கூட, உடனடி மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது.