உலகக்கிண்ண அணிகளின் சீருடை நிறம் மாறுகிறதா?

இதயும் பாருங்க

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாகன பட்டியலை தமிழக பொலிஸார் வெளியிட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கை வழியாக 6...

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு...

ப.சிதம்பரம் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ்...

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடை அணிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1992ஆம் ஆண்டு முதல், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டின் அணி வீரர்களும் வண்ண சீருடைகள் அணியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டன.

அன்று முதல் தற்போது வரை நீலநிற சீருடை அணிந்தே இந்திய அணி களம் காண்கிறது. இதனால் இந்திய அணியை ‘Men In Blue’ எனச் செல்லமாக அழைப்பதும் உண்டு.

உலகக்கிண்ண தொடரில் இதுவரை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீலநிற சீருடையில் விளையாடி வருகின்றனர். நீலநிறம் என்றாலும் அதில் வித்தியாசம் இருக்கும்.

இந்நிலையில் நடப்பு உலகக்கிண்ண தொடரில் ஐசிசி புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு போட்டியில் ஒரே நிற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்றும், அப்படி விளையாடுவதால் விரர்களின் அணிகளை சரியாக கணக்கிட முடியாது என்பதாலும் சீருடை மாற்றப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளில் இங்கிலாந்து அணி மட்டும் தன்னுடைய சொந்த சீருடையில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற அணிகள் தங்களுக்கான சீருடையின் நிறங்களை, அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் ஐசிசி கூறியுள்ளது.

அந்த வகையில் ஜூன் 30ஆம் திகதி இங்கிலாந்துடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் பாகிஸ்தான், பங்களாதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பச்சை நிற சீருடையில் விளையாடி வருகின்றன.

இதில் பாகிஸ்தான் மட்டும் சொந்த சீருடையில் விளையாடலாம் எனவும், மற்ற இரு அணிகளும் பாகிஸ்தானுடன் விளையாடும்போது மாற்று நிற சீருடையில் விளையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது புதுசு

கஸ்தூரிக்கு வந்த சோதனை! இந்த வாரம் வெளியேற்றம்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தர்ஷன், சாண்டி, சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர்...

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக...

Bailwaan Official Trailer – Tamil Kichcha Sudeepa

Watch Bailwaan Tamil Movie Official Trailer 2019 Director: Krishna Producer: Swapna Krishna Music: Arjun Janya DOP: Karunakar. A Film Editor: Ruben Executive Producer: S. Devraj Production Designer: Shivakumar Kusthi: A. Vijay Boxing: Larnell...

யோகிபாபுவின் ஜாம்பி ட்ரைலர்

Cast : Yogi Babu, Yashika Aannand , Gopi Sudhakar , T M Karthik , Black Sheep Anbu Written & Directed by : Bhuvan Nullan...

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்...

More Articles Like This