ஊடக அறம், உண்மையின் நிறம்!

உலகக் கோப்பை தோல்விக்கு பழி வாங்குமா இந்தியா?

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாம் போட்டி நாளை ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்துகொண்டிருக்கும் இந்திய அணி, கடைசியாக நியூசிலாந்து அணியை உலகக் கோப்பை அரை இறுதி சுற்றுக்குப்பிறகு இன்றுவரை எந்த ஒரு போட்டியிலும் சந்திக்கவில்லை.

இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, நடைபெற்ற 5 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றிவாகை சூடியது.

ஆனால் அதன் பிறகு இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டிகள் அனைத்திலும், நியூசிலாந்து அணியை வீழ்த்துவது சற்று கடினமாகயிருந்தது.

தன்னுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை வீழ்த்துவது என்பது, ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவதை விட கடினம்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது, தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலுமே நியூசிலாந்து அணி எளிதாக வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த அணியை ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி சந்திப்பது, கிரிக்கெட் வட்டாரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்ற பேச்சுக்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.

ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக தொடரை கைப்பற்றியது.

ஆனால் காயம் காரணமாக ஷிகர் தவன் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது, சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு வழிவகுத்தாலும், இந்திய அணிக்கு துவக்கத்தில் அதிரடி காட்டுவதற்கு ஒரு வீரர் குறைந்துள்ளது.

டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்துள்ள வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களிலும் விராட் கோலி-2689 மற்றும் ரோஹித் சர்மா-2633 இருக்கிறார்கள், மூன்றாவது இடத்தில் 2436 ரன்களுடன் தோனியை உலகக் கோப்பையில் ரன்-அவுட் ஆக்கிய மார்டின் குப்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

78 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ள விராட் கோலி, நியூசிலாந்து அணியை இந்திய அணியின் கேப்டனாக சந்தித்ததில்லை.

இதுவரை 128 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 64 சதவீதம் வெற்றி விகிதத்துடன் 80 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற 12 டி20 போட்டிகளில் 3 வெற்றி 8 தோல்வி என்று பின்தங்கியுள்ள இந்திய அணி, 2007 மற்றும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் போது வலுவாக இருந்தாலும், நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி நாளை ஆக்லாண்டில் இலங்கை நேரப்படி மதியம் 12:30 மணிக்கு தொடங்கவுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.